ஆபத்தான மரங்களை அகற்றுதல்
மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி பாதைக்கு அல்லது வீட்டுக்கு சேதமேற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் பிரதேச சபை இதன்பொருட்டு நடவடிக்கை எடுக்கும். இதன்போது பிரதேச தலைவருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து பிரதேச சபையின் செயலாளருக்கு விண்ணப்பமொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மரம் அல்லது மரத்தின் கிளைகள் 14 நாட்களுக்குள் அகற்றப்படாவிட்டால், அதை அகற்றி அதற்கான செலவை மரத்தின் உரிமையாளரிடமிருந்து அறவிட்டுக்கொள்ள தலைவருக்கு அதிகாரம் உண்டு.
இணங்கற் சான்றிதழ் வழங்குதல்
இச் சான்றிதழ் ஏதேனும் கட்டிடமொன்று அங்கீகரிக்கப்பட்ட நிலஅளவை திட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக வழங்கப்படுகின்றது. கட்டிடம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதில் குடியேறுவதற்கு முன்னர் பிரதேச சபையிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குப்பைகளை அகற்றுதல்
பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் சேர்கின்ற குப்பை கூளங்களை அகற்றி பிரதேசத்தை தூய்மைப்படுத்துவதற்கும் துப்புரவேற்பாட்டைப் பேணுவதற்கும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களும் உழவு இயந்திரங்களும் (ட்ரக்டர்) பயன்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிட திட்டங்களை அங்கீகரித்தல்
பிரதேச சபையினால் தமது அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண நடவடிக்கைகளின் கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிரகாரம் ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்ற அனைத்து நபர்களும் இப் பிரதேச சபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்
ஏதேனும் ஒரு பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரஙகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் விதிக்கப்பட்டுள்ள சூழல் தரங்கள் பேணப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக இது இருக்கிறது. 2000.11.22ஆம் திகதியிட்ட 1159/22ஆம் இலக்க வர்த்தமானியின்மூலம் சூழலியல் அமைச்சர் ஒவ்வொரு பிரதேச சபை அதிகார பிரதேசத்திலும் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வியாபாரங்களும் இந்த அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.
மயானம் மற்றும் தகனகூட சேவை
பிரதேச சபை அதிகாரபிரதேசத்தில் அனைத்து மயானங்களையும் பராமரிக்கின்ற பணிகளை பிரதேச சபை மேற்கொள்கின்றது.
தகனகூட சேவைகளை வழங்குகின்றபோது இறப்புச் சான்றிதழுடன் பிரதேச தலைவருக்கு முன்வைக்கின்ற எழுத்துமூல விண்ணப்பத்துடன் பிரதேச சபை செயலாளருக்கு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறித்த கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் பிரதேச சபை தலைவரினால் அனுமதி வழங்கப்படும்.