வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் நிறுவன கட்டமைப்பு

செட்டிகுளம் பிரதேச சபை கீதம்
வாழ்க வாழ்க வெங்கலச்
செட்டிகுளம் பிரதேச சபை
வாழ்க என்றும் வாழ்க இந்த
வையகத்தில் தமிழென (வாழ்க)
ஈழமாம் எமது நாட்டின்
இதயமாம் வன்னி மண்ணின்
வாழ நல்ல வவுனியா
மாவட்டத்திலே அமைந்த நிலம் (வாழ்க)
வீரநாராயனன் என்ணும்
வெங்கலசெட்டி பேரால்
விளங்கும் வெங்கலசெட்டி
குளம் வாழ்க (வாழ்க)
தரனி போற்ற நல்ல
தனித்துவமாக என்றும்
தலைநிமிர்ந்தோங்கி பிரதேச
சபை வாழ்க (வாழ்க)
வீதி கல்வி வீடு கால்வாய்
விளக்கு சந்தை பூங்கா சுத்தம்
ஆதியான பணிகள் நூல்
அகம் மயானம் சிறுவர் நலன் (வாழ்க)
கலைகள் மொழிசமயம் வரி
கட்டிடங்கள் சட்டஆக்கம்
விலையிலாத மக்கள் வாழ்வு
வீறுபெறச் செய்துவாழ்க (வாழ்க)
மக்கள் பணி ஆற்ற என்றும்
மக்கள் தெரிந்தெடுத்த சபை
மக்கள் வாழ்வுக் கணைத் தையுமே
மாண்புடனேஆற்றிவாழ்க (வாழ்க)
எங்கள் தேவைதனை அறிந்து
எங்களுக்காய் சேவை செய்யும்
எங்கள் பிரதேச சபை
எங்கும் புகழ் பரப்பி வாழ்க (வாழ்க)
பாடலாக்கம் : கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
பாடி இசையமைத்தவர் : இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன்
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம்
