வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபைக்குச் சொந்தமான இறைச்சிக்கடை, மீன்கடை பொதுச்சந்தை, பொதுமலசலக்கூடம் மற்றும் சுற்றுலா மையம் ஆகியவற்றிற்கான கேள்வி திறத்தல் - 2024
காலம் - 2023.11.07
நேரம் - காலை 10.00 மணி
Month: February 2024
சிரமதானம்
நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தின் கீழ் "எமது கணேசபுரம் கிராமத்தை பிளாஸ்டிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்" என்ற தொனிப்பொருளில் எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் கீழ் #கணேசபுரம் கிராமத்தில் இயங்கிவரும் #அபிராமி_சனசமூக_நிலையத்தின் ஏற்பாட்டில் அபிராமி சனசமூக நிலைய அங்கத்தவர்களும், வ/#கணேசபுரம்_சண்முகானந்தா_வித்தியாலய (2023) தரம் 6 முதல் தரம் 11 வரையான மாணவர்களும் இணைந்து பொது மலசலகூடம், பஸ்தரிப்பிடம் ஆகிய இடங்களுக்கு முன்பாக 25.11.2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சிரமதானம் ஒன்றை வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்தின் உதவியுடன் முன்னெடுத்திருந்தனர்.
அன்று கணேசபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், சுற்றுப்புரங்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டு கழிவுப்பொருட்களான காண்ணாடி போத்தல்கள், பிளாஸ்ரிக் போத்தல்கள், தகரங்கள் ஏனைய பிளாரிஸ்க் கழிவு பொருட்கள் என்பவை தரம் பிரித்து பிரதேச சபை ஊழியர்களால் சேகரிக்கப்பட்டது.
இச்செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய #கணேசபுரம் #அபிராமி_சனசமூக_நிலையம், வ/#கணேசபுரம்_சண்முகானந்தா_வித்தியாலய (2023) மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
உலக மண் தினம்
🇱🇰#உலக_மண்_தினம் - 05.12.2023🇱🇰
♻️உலக மண் தினத்தை முன்னிட்டு வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை, வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகம், வெங்கலசெட்டிகுளம் பொலிஸ் நிலையம், MOH வெங்கலசெட்டிகுளம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களின் ஒன்றிணைவில் செட்டிகுளம் தொடக்கம் முகத்தான்குளம் மற்றும் பேரூந்துதரிப்பிடம் என்பனவற்றில் காணப்படும் 🚯⚠️பிளாஸ்டிக், 💀🚯⚠️பொலித்தீன், 🚯⚠️போத்தல் மற்றும் 🚯⚠️ரின்கள் என்பன வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையின் வாகன உதவியுடன் சேகரிக்கப்பட்டன.♻️
♻️இவ்சுற்றுசூழலை தூய்மைப்படுத்தும் செயற்பாடானது தொடர்ச்சியாக நடைமுறையில் இருப்பதற்கு பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.♻️
தகவல்
♻️வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை,
♻️வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகம்
♻️வெங்கலசெட்டிகுளம் பொலிஸ் நிலையம்
♻️MOH வெங்கலசெட்டிகுளம்
டெங்கு_கட்டுப்பாட்டு_நடவடிக்கைகள்
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இன்று எமது #பிரதேச_சபை_அலுவலகம் மற்றும் #பொது_நூலகத்தின் சுற்றுப்புரங்கள் எமது பிரதேச சபை அலுவலர்களால் சுத்தம் செய்யப்பட்டன.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் “2019-2023”
22.12.2023) எமது வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் “#நேர்மையான இலங்கை’’ என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தெ.ரதீஸ்வரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு எமது பிரதேச சபை செயலாளர் திருமதி.தெர்ஜனா சுகுமார் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இதில் பிரதேச சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்
(22.12.2023) எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் கீழ் உள்ள #செட்டிகுளம்_முன்பள்ளியில் #சிறுவர்_தினத்தை 🚶♀️🚶🚶♂️🏃♀️👩🦯🧑🦯🧎♂️👭👬👩👩👦👦👩👩👧👧முன்னிட்டு கலைநிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.
உள்ளூர் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தல்
எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையில் #Cargills_Food_City நிறுவனத்தால் நடாத்தப்பட்ட #உள்ளூர்_உற்பத்திப்பொருட்களை_சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலில் எமது சபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள்
கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் -நான்காம் காலாண்டு – 2023
தேசிய வாசிப்பு மாதம் -2023
எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை அலுவலகத்தில் 06.12.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட்ட ✅✅தேசிய வாசிப்பு மாதம் -2023 ✅✅மற்றும் ✅✅பரிசழிப்பு நிகழ்வும்✅✅ செங்கலம் இதழ் வெளியீடும்✅✅ நிகழ்வுகளினது தொகுப்பு காணொளி
இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டல்
இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் எமது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.🇱🇰.🇱🇰.🇱🇰
நிலையான அபிவிருத்தி இலக்குகள் : சூழலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல், மீளமைத்தல், முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம் தரமிழத்தலை தடுப்பதற்கும் மாற்றுவதற்கும் போராடுவதுடன் உயிர்பல்வகைத்தன்மையின் இழப்பினை நிறுத்தல்.