சிரமதானம்

நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தின் கீழ் "எமது கணேசபுரம் கிராமத்தை பிளாஸ்டிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றியமைப்போம்" என்ற தொனிப்பொருளில் எமது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் கீழ் #கணேசபுரம் கிராமத்தில் இயங்கிவரும் #அபிராமி_சனசமூக_நிலையத்தின் ஏற்பாட்டில் அபிராமி சனசமூக நிலைய அங்கத்தவர்களும், வ/#கணேசபுரம்_சண்முகானந்தா_வித்தியாலய (2023) தரம் 6 முதல் தரம் 11 வரையான மாணவர்களும் இணைந்து பொது மலசலகூடம், பஸ்தரிப்பிடம் ஆகிய இடங்களுக்கு முன்பாக 25.11.2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சிரமதானம் ஒன்றை வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்தின் உதவியுடன் முன்னெடுத்திருந்தனர். அன்று கணேசபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், சுற்றுப்புரங்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டு கழிவுப்பொருட்களான காண்ணாடி போத்தல்கள், பிளாஸ்ரிக் போத்தல்கள், தகரங்கள் ஏனைய பிளாரிஸ்க் கழிவு பொருட்கள் என்பவை தரம் பிரித்து பிரதேச சபை ஊழியர்களால் சேகரிக்கப்பட்டது. இச்செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய #கணேசபுரம் #அபிராமி_சனசமூக_நிலையம், வ/#கணேசபுரம்_சண்முகானந்தா_வித்தியாலய (2023) மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்