வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை பற்றிய விபரங்கள்

அறிமுகம்

இலங்கையின் வடமாகாணநுழைவாயிலாக கருதப்படும் வவுனியாமாவட்டத்தின் 04 பிரதேச சபை பிரிவுகளில் வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபையும் ஒன்றாகும். இப்பிரதேசசபைக்குட்பட்டபரப்பானது சூடுவெந்தபுலவுதொடக்கம் பெரியதம்பனைவரை 40 கிலோமீற்றர் நீளமும் குருக்கள்புதுக்குளம் தொடக்கம் மாங்குளம் வரை 50 கிலோமீற்றர் அகலமும் கொண்டது. இதன் கிழக்கே சூடுவெந்தபுலவும் வடக்கேபெரியதம்பனையும் தெற்கேமாங்குளமும் மேற்கேபறயனாலங்குளமும் எல்லையாகஅமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் மொத்தபரப்பளவு 412.98 சதுரகிலோமீற்றர் ஆகும்.இப்பிரதேசசபையின் நிர்வாகபரப்பளவில் தமிழர், முஸ்லிம்,சிங்களவர் ஆகிய மூவினமக்களும் வாழ்கின்றனர். வெங்கலசெட்டிகுளம் பிரதேசத்தில் 20 கிராமசேவையாளர் பிரிவைகொண்ட 93 கிராமங்கள் காணப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கானபுள்ளிவிபரத் தரவுகளின் படிஇப்பிரதேசத்தின் மொத்தசனத்தொகை29822பேர் ஆகும். இவர்களில் தமிழர்கள் 19947பேரும், முஸ்லிம்கள் 9846பேரும்;, சிங்களவர்கள் 29பேரும் அடங்குகின்றனர். 1987 ம் ஆண்டு 15ம் இலக்கபிரதேசசபைகள் கட்டளைச்சட்டம் மூலம் பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டன. 01.01.1988 ஆம் ஆண்டுபிரதேசசபைகள்ஆரம்பிக்கப்பட்டபோதுஅதற்குமக்களால் தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படும் வரைஉதவிஅரசாங்கஅதிபர் நிர்வாகத்தைகவனிப்பதற்காகசபையின் விசேடஆணையாளர் ஒருவரைஅரசுநியமிக்கவேண்டியிருந்ததினால் உதவிஅரசாங்கஅதிபர்,பிரதேசசெயலாளர்கள் விசேடஆணையாளராகநியமிக்கப்பட்டனர். 2004ம் ஆண்டின் பின் சபையின் கடமைகளைகவனிப்பதற்குரிய அதிகாரம் செயலாளருக்குவழங்கப்பட்டது. வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபையின் முதலாவதுமக்கள் பிரதிநிதிகள் சபையானது 2011 ஆம் ஆண்டுநடாத்தப்பட்டஉள்;ராட்சிசபைகளுக்கானதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டது. இச்சபையானது 09 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டிருந்ததோடு 20.04.2011 முதல் 2015 வரை இச்சபையைநிர்வகித்தது. 2017.02.17 ஆம் திகதியஉள்;ர் அதிகாரசபைதேர்தல் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இப்பிரசேசபையானது 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டதுடன் நேரடியாக 11 உறுப்பினர்களும் விகிதாசாரஅடிப்படையில் 08 உறுப்பினர்களுமாகமொத்தம் 19 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டசபையாகமாற்றப்பட்டது. இதனடிப்படையில் இரண்டாவதுமக்கள் பிரதிநிதிகள் சபையானது2018 மார்ச் 20ம் திகதியிலிருந்து19.03.2023 வரைசெயற்பட்டுவந்தது.

Picture1

வவுனியாவின் நான்கு பிரதேச செயலகப்பிரிவுகள்

v-removebg-preview
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை வட்டாரங்கள்

No of Wards : 10 | No of GN Divisions : 20 | No of Villages : 93 | No of Elected members : 17/19 | Population : 29,160

நிறுவனத்தின் தூரநோக்கு(VISION)

“மக்கள் நலன்களில் நிறைவுகாணுதல்”

நிறுவனத்தின் பணிக்கூற்று(MISSION)

“பிரதேசத்தில் காணப்படும் பௌதீகமனிதவளங்களைஒருங்கிணைத்துபிரதேசசபையின் சட்டவிதிகளுக்குஅமைவாக இப்பிரதேசமக்களின் நலன்புரிக்கானஎதிர்;பார்ப்புக்களைதிருப்திகரமானமுறையில் பூர்த்திசெய்துபிரதேசபொருளாதாரஅபிவிருத்தியைமேம்படுத்துவதன் ஊடாகநாட்டின் பொருளாதாரஅபிவிருத்தியில் நிலைத்ததன்மையைஏற்படுத்துதல்”

பிரதானபணிகள்

வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரதானபணிகளாவன.
1. செட்டிகுளகிராமத்தினை நகரமயமாக்கி அபிவிருத்தி செய்தல்.
2. சிறந்தமுறையில் பாதைகளைசீரமைப்பதன் மூலம் வினைத்திறமை வாய்ந்த போக்குவரத்து வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்துதல்.
3. சிறந்த சந்தை வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல்.
4. சிறார்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் போன்றோருக்கான போசாக்கு வசதிகளை ஏற்படுத்துதல்.
5. பொதுமக்கள்,மாணவர்கள் போன்றவர்கள் பயன்படுத்தத்தக்கவகையில் சிறந்தநூலகசேவைகளைவழங்குதல்.
6. கழிவகற்றல் முகாமைத்துவத்தினைசிறந்தமுறையில் செயற்படுத்துதல்.
7. இடுகாடுகள்,சுடுகாடுகள் போன்றனவற்றைபேணிபராமரிக்கின்றபணியினைசிறப்பாகசெயற்படுத்திவருதல்.
8. பிரதேசத்தில் வரட்சியானகாலங்களில் தண்ணீர்த்தாங்கிகள் மூலம் நீர்விநியோகம் செய்தல்.
9. ஆயுள்வேதசுகாதாரவசதிகளை இப்பிரதேசமக்களுக்குவழங்குதல்.
10. நோய்த்தடுப்புத்திட்டங்களைஅமுல்படுத்துதல்.
11. நகரஅபிவிருத்திஅதிகாரசபையின் சட்டத்தினைஅமுல்ப்படுத்துவதன் மூலம் கட்டடங்களும்,வீதிகளும் உரியமுறையில் அமைக்கப்படுவதனைஉறுதிப்படுத்தல்.
12. பொதுமக்களினதும் சிறார்களினதும் பொழுதுபோக்குஅம்சங்களைகருத்திற்கொண்டுபொதுப்பூங்காக்களையும்,சிறுவர் பூங்காக்களையும் அமைத்துபராமரித்தல்.
13. சுற்றுப்புறச் சூழலைபாதுகாப்பதற்குஆக்கபூர்வமானநடவடிக்கைகளைமேற்கொள்ளல்.
14. விளையாட்டுத்துறையினை அபிவிருத்திசெய்யும் நோக்கத்துடனும் உடல், உளரீதியான ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் நோக்கத்துடனும் விளையாட்டு மைதானங்களை பேணிபராமரித்துவருதல்.
15. உள்;ராட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரியமுறையில் அமுல்ப்படுத்துதல்.

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை இலச்சினை

cropped-newlogo.png

இலச்சினையில் அடங்கும் படவிளக்கம்

  • சூரியன் : இயற்கை, எழுச்சி
  • ஏர் : விவசாயம், உழுந்து (பிரதான தொழில்)
  • பசு : கால்நடை வளர்ப்பு (உப தொழில்)
  • புத்தகம் : கல்வி அறிவு தாமரை : அழகு நீர் நிலைகள் நெற்கதிர் : செல்வம் (பிரதான வருமானம்)
  • பச்சை நிறவளையம் : சூழவுள்ள வனப்பசுமை
  • மயில்கள் : கலைகள் (இயல், இசை, நாடகம்)
  • புத்தகத்தின் மீதுள்ள “ஏர் எழில் எழுத்து ஏற்றம் என்பது விவசாயத்தோடு இயற்கை அழகு கல்வியினால் நம் உயர்வு”

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை கொடி

Picture1

செயலாளர்

cropped-newlogo.png

Vengalacheddikulam Pradeshiya Sabha.

+94 24 2260914

Mr.Sabaradnam
Mr.Sabharadnam Kirubakaran, Secretary

Vengalacheddikulam Pradeshiya Sabha.

+94 24 2260913

தொடர்புடைய இணைப்புக்கள்

அமைவிடம்

தொடர்புகளுக்கு

Via Email:
cheddips@gmail.com
Via Phone:
+94 2260914