இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டல்

இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் எமது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.🇱🇰.🇱🇰.🇱🇰
நிலையான அபிவிருத்தி இலக்குகள் : சூழலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல், மீளமைத்தல், முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம் தரமிழத்தலை தடுப்பதற்கும் மாற்றுவதற்கும் போராடுவதுடன் உயிர்பல்வகைத்தன்மையின் இழப்பினை நிறுத்தல்.

 

சேவை நலன் பாராட்டு மற்றும் ஆண்டிறுதி நிகழ்வு

16.12.2023 வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் ஊழியர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு மற்றும் ஆண்டிறுதி நிகழ்வில் எமது சபையில் இருந்து ஓய்வு பெற்று சென்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்று சென்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டு – 1ம் நாள் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.

✅#2024 ஆம் ஆண்டு - 1ம் நாள் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல். “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" ✅Commencement of Work, Year – 2024 “A Prelude to the Stable Future,”

போசாக்குணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம்

428236272_239853542543456_8763649519960331320_n

எமது சபையின் வரவு செலவு திட்டத்தின் மூலம் 2024ம் ஆண்டில் சிறுவர் முன்பள்ளி மாணவர்களிற்கான #போசாக்குணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஊடாக எமது சபைக்குட்பட்ட முன்பள்ளிகளான #குருக்கள் புதுக்குளம் சரஸ்வதி முன்பள்ளி மற்றும் #துடரிக்குளம் பிரதேசசபை முன்பள்ளி என்பவற்றிற்கான 🥛🥛🥛🥛பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 🥛🥛🥛🥛 🎗🎗அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்தல்.🎗🎗